kadhal movie comediyan begging in temple
பல தமிழ் படங்களில் கும்பலோடு, கும்பலாக நடித்து கொண்டிருந்த 'பல்லு பாலு' இவரை, காதல் படத்தில் விருச்சிககாந்த் என்கிற காமெடி வேடத்தில் நடிக்க வைத்தவர் காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
இந்த படத்தில் இவர் பேசிய "நடிச்சா ஹீரோ சார்.. நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல். அப்புறம் சி.எம்” என கூறி பலரது கைதட்டல்களை வாங்கியவர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அவருக்கு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை இந்த மன வருத்தத்தில் சினிமாவை விட்டு சற்று விலகியே இருந்தார்.
இந்நிலையில் இவரது பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது எழும்பூர் அருகே உள்ள சூலை பகுதியில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார் பல்லு பாபு.
சமீபத்தில் இவரை இன்டெர்வியூ செய்ய வேண்டும் என்று, அவரை தேடி போனபோது பிரபல பத்திரிகையாளுக்கு இந்த செய்தி தெரியவந்துள்ளது. இந்த தங்கள் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
