சியான் விக்ரம் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'கடாரம் கொண்டான்' .  இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் மாறும் திரிஷாவை வைத்து 'தூங்காவனம்' படத்தை இயக்கிய,  இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை நடிகர் கமலஹாசன் ராஜ்கமல் இன்டர்நேஷனல் அண்ட் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தில், விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும், இந்த படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில். மலேசியாவில் இப்படம் ரிலீசாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இந்த படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பி, சான்றிதழ் பெறாத காரணத்திற்காக, அந்த நாட்டில் இந்த படம் வெளியாக தடை செய்துள்ளனர். எனவே விரைவில், சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.