கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 'கபாலி'. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் பெரும் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் சுமார் ரூ.88 கோடி அளவுக்கு வசூலை அள்ளிக்கட்டியது.

அமெரிக்காவில் 480 திரையரங்குகள், மலேசியாவில் 490 திரையரங்குகள், வளைகுடா நாடுகளில் சுமார் 500 திரையரங்குகள் என சுமார் 4000 திரையரங்குகளுக்கு அதிகமாக இப்படம் வெளியாகி 100-வது நாளை அக்டோபர் 29-ந்தேதி இன்று தொடுகிறது. இதுவரை ஏறக்குறைய ரூ.300 கோடி அளவுக்கு வசூலை குவித்துள்ளது என கூறப்படுகிறது.
உலகளவில் வசூல் நிலவரம்
முதல் நாள் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 88 கோடி வசூல் செய்திருக்கிறது 'கபாலி'. தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் முறியடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தீபாவளியன்று வரும் 100-வது நாளை சிறப்பாகக் கொண்டாட ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
கபாலி படத்தின் வசூல் உலக அளவில் ரூ.300 கோடியைத் தாண்டும், என்றும், இதில் வெளிநாடுகளில் மட்டும் ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது. பல்வேறு மொழிகளில் விற்பனை உரிமம், ரிலீஸ் செய்தது தொடர்பாக ரூ.225 கோடி வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 100 நாளை எட்டிய நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அதாவது 30-ந்தேதி ஏசியாநெட் சேனலில் மாலை 6மணிக்கு கபாலி திரைப்படம் திரையிடப்படுகிறது. தொலைக்காட்சி சேனலில்முதல்முறையாக ஏசியாநெட் சேனலில் கபாலி திரைப்படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
