நயன்தாராவின் (nayanthara) காதலர் காதலர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' (Kaathuvaakula rendu kadhal first look) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

நயன்தாராவின் காதலர் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன். சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக தற்போது வெளியாகியுள்ளது.

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் நடத்தினார். பின்னர் திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதுச்சேரியில் இறுதி கட்ட படப்பிடிப்பை எடுத்து முடித்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட, வீடியோ, மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவியது. குறிப்பாக ஒரே பேருந்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா செல்லும் காட்சியின் புகைப்படம் தாறுமாறாக வைரலானது.

Click and drag to move

இந்த படத்தில் சமந்தா - நயன்தாரா இருவரும் தோழிகளாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளைய தினம் இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன், வித்தியாசமான போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான 2 சிங்கிள் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஃபஸ்ட் லுக் போஸ்டரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர், ட்ரைலர், மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.