சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இணைந்து ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார். இந்த படத்தை நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும்மான தனுஷ் தயாரித்துள்ளார்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் டீசர் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காலா கரிகாலனாக மாறி நிற்கும் ரஜினியின் நடிப்பும், நானாபடேகரின்  வில்லத்தனமும் அசத்தல். பின்னணி இசை சற்று காபலி படத்தை நினைவு படுத்துவதுப் போல் உள்ளது.

விமர்சனம்:

காலா... என்ன பேருய்யா இது! என நானாபடேக்கர் கேட்க... ரஜினிகாந்த் மழையில் கருப்பு நிற ஆடை, கண்ணாடி, கருப்பு நிற கொடை என மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். 

பின் காலா என்றால் கருப்பு... காலன் கரிகாலன் சண்டை போட்டு காக்கிறவன் என பின்னணி குரலில் வருகிறது.

சண்டை தான போடுவாரு போடுவாரு... எத்தனை நாளைக்கு என நானும் பாக்கேன் என ஈஸ்வரி ராவ் நெல்லை தமிழில் குரலை உயர்த்துகிறார்.

அடுத்த ஷாட்டில், ரஜினிகாந்த் சிலரை தூக்கிப் போட்டு பந்தாடுகிறார். பின் நானாபடேக்கர் 'இந்த தேசம் சுத்தமா, புனிதமா மாறனும்னு விரும்புகிறேன்' என்று கூறுகிறார். இதற்கு அவர் முன் கருப்பு சிங்கம் போல் அமர்ந்து 'கருப்பு உழைப்போட வண்ணம்'... என் சால்ல வந்து பாரு அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும் என கூறுகிறார் ரஜினிகாந்த். 

ரஜினி வசிக்கும் வண்ணமயமான சால் காட்டப்படுகிறது... இங்கு தான் என்ட்ரி கொடுக்கிறார் ஹீமோ குரோஷி.... அதே போல் கலக்கலாக ரஜினிகாந்த் மற்றும் ஈஸ்வரி ஜீப் மேல் அமர்ந்திருக்கும் காட்சியும் இடம்பெறுகிறது.

'வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்... தில் இருந்தா மொத்தமும் வாங்கல என ரஜினி சொடக்கு போட்டு சொல்லும் ஸ்டைல் ரசிகர்களில் கைத்தட்டலை அள்ளுகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் யோகி பி குரலில் . 'வா உன்னையும் மண்ணையும் வென்று வா நீ... ராதவோர் தேவையைக் கொண்டு வா நீ... ஆயிரம் ஆண்டுகள் போதுமேயுன்... ராகமே மாறுவாய் சீருவாய்' என்ற பாடல் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது.

 

இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்கள் பார்த்தது இல்லையில்ல... என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ரஜினி வசனம் பேசும் ஸ்டைல் மாஸ்.

கச்சிதமான எடிட்டிங், அட்டகாசமான ஒளிப்பதிவு, அசத்தலான இசை... தெறிக்க விடும் கருத்துக்களோடு ரஜினி பேசும் வசனங்கள் என இந்த காலா டீசர் வேற லெவலில் அமைத்துள்ளது என்றே கூறலாம்.