kaala movie review in asianet
'காலா' திரைப்படம் பல மாதங்களாக ரஜினி ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் எனலாம். மக்களுக்காக போராடும் போராளியாக வரும், ரஜினியை பற்றியும், மும்பை தாராவி மக்களின் வாழ்க்கையை பற்றியும் சொல்லும் கதை என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்து விட்டனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகமாகவே இருந்தது என கூறலாம். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்கிற விமர்சனத்தை பார்ப்போம்.
'காலா' கதைக்களம்:
நெல்லையில் இருந்து மும்பை தாராவி வந்து, தன்னுடைய தந்தைக்கு பின் தாராவி மக்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து மக்களுக்கு நல்லது செய்பவர் தான் 'கரிகாலன்' என்கிற 'காலா சேட்டு'.
தாராவி பகுதியில் 8 க்கு 8 யில் வாழும் மக்களுக்கு நல்லது செய்கிறேன், தாராவியை சுத்தமாக்குகிறேன் என்று கூறி வருபவர் தான் சைலென்ட் வில்லத்தனத்தில் மாஸ் காட்டி இருக்கும் 'நானா பட்நேக்கர்'
இந்த ப்ரோஜெட்க்டை உள்புகுத்த வேண்டும் என்று, ரஜினிக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை தீட்டி, கடைசியில் தாராவியை சுத்தம் செய்கிறாரா நானா பட்நேக்கர், ஏன் இந்த திட்டத்தை ரஜினி எதிர்க்கிறார் என்பது தான் 'காலா' படத்தின் கதைக்களம்.
படம் பற்றிய ஒரு பார்வை...
ஆதி காலத்தில் மனிதன் எப்படி தோன்றினான் என்றும் எப்படி அடிமையாக்கப்பட்டான் என்றும் ஒரு சிறு தொகுப்பை காட்டி படத்தை துவங்கி இருக்கிறார் ரஞ்சித். ரஜினியின் என்ட்ரி மாஸ் ஆக ஆரம்பிக்கும் என பார்த்தால், அதிலும் அவுட் செய்துவிட்டார் ரஞ்சித். இதை படத்தில் பார்த்தால் நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள்.
ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரிராவின் நடிப்பு ரசிகர்களின் மனதை வருடுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு மகன்களாக நடித்துள்ள வத்திகுச்சி தீபனின் நடிப்பு அசத்தல். இது வரை ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றிய நடிகருக்கு லெனின், என்ற போராளியின் பெயரை சூட்டி அவருடைய நடிப்பை அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார் ரஞ்சித்.
எப்போதும் ரஜினியுடனே இருக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரகனி. எப்போதும் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்து வெளிப்படுத்தி வரும் இவர் இந்த படத்தில் குடித்துக்கொண்டே இருக்கும் ரஜினியின் நண்பராக நடித்துள்ளார்.
தற்போதைய காலத்தில், திருமணத்திற்கு பின் தனிக்குடித்தனம் செல்ல பிரிந்துவிடும் சூழலில் கூட்டுக்குடும்பத்தின் அருமை பெருமைகளும் இடம்பெற்றுள்ளது.
தாராவியில் பிறந்து வளர்ந்து... அமெரிக்காவிற்கு சென்று ஒரு பில்டிங் காண்ட்ராக்ட்டராக வரும் 'ஹீமோ குரோஷிக்கும்' ரஜினிக்கும் என்ன உறவு என்பது ஆரம்பத்திலேயே நமக்கு புரிந்தாலும். இவருடைய காதல் பார்வையை சாமர்த்தியமாக சமாளிக்கும் மனைவியாக நடித்து இங்கும் கைதட்டல்களை அள்ளுகிறார் ஈஸ்வரி.
தாராவியை சுத்தம் செய்ய அரசாங்கம் தான் வரவேண்டும், தனியார் கம்பெனி வரக்கூடாது முக்கியமாக நானா பட்நேக்கர் வரவே கூடாது என எதிர்க்கும், பிரச்சனையில் குடும்ப நபர்களை இழக்கும் ரஜினி பின் எப்படி வில்லத்தனத்தை முறியடிக்கிறார், ஜெயிக்கிறார் என்பது தான் மீதிக்கதை.
சந்தோஷ் நாராயணன் மியூசிக்:
'கண்ணம்மா' பாடல் மூலம் மனதை வருடுகிறார். தங்கசிலை பாட்டு சான்ஸ் சே இல்லை ஈஸ்வரிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அதே போல் நிக்கல் நிக்கல் பாடல் போராட்டத்தின் தீவிரத்தை பேசும் வகையில் உள்ளது. மொத்தத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் என்று சொல்வதை தவிர வேறு வார்த்தை இல்லை.
பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
'காலாவின் பிளஸ்'
ரஞ்சித்தின் எதார்த்தமான கதை.
ரஜினியின் ஸ்டைலை குறைத்து அவரை கையாண்டு உள்ள விதம் அருமை.
இடைவேளை மாஸ்
நானா பட்நேக்கர் - ரஜினி - ரகுவரனை காட்சியை நினைக்க வைக்கிறது.
மைனஸ்:
ஹீமோ குரோஷியின் காதல் கபாலி படத்தின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் பாதி காரணத்தோடு காட்சிகள் வந்தாலும் வன்முறையே அதிகம் உள்ளது. இது கதைக்கு தேவையா என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் கபாலி படத்தில் விட்ட இடத்தை இந்த படத்தின் மூலம் ஸ்கெட்ச் போட்டு, பிடித்திருக்கிறார் ரஞ்சித். இது மக்களுக்கு குரல் கொடுத்தவரின் சிறந்த கதை என அனைவராலும் பாராட்டப் பட்டு வருகிறது.
ஏசியா நெட் ரேட்டிங்: 3.5 / 5
