kaala movie moving with rajinth not for rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு இன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகும் திரைப்படம் 'காலா'.

இந்த படத்தில் இரண்டாவது முறையாக ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஒரு சில திரையரங்கங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட, பெரிய அளவிலான கட்டவுட்டுகள் ரஞ்சித்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. 

இதனால், இனி ரஜினிகாந்தை வைத்து படத்தை ஓட்ட முடியாது என தெரிந்து, ரஞ்சித்தை வைத்து படத்தை ஓட்டுவதாக ஒரு சில பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் அடிப்பட்டு வருகிறது. ஒரு இயக்குனருக்கு இது போன்ற கட்டவுட்டுகள் வைத்து அவருடைய படத்தை வரவேற்பது, நல்ல முன்னேற்றம் என்றாலும். கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்று வெறித்தனமான ரசிகர்களை வைத்துள்ள ரஜினிகாந்தின் படம் அவரை வைத்து ஓடாது என பரவி வரும் வார்த்தைகளை ரஜினிகாந்தின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.