kaala movie is the most profitable in the line how much

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

ரஜினிகாந்த் அரசியல் ஆர்வத்தில் பேசிய ஒரு சில வார்த்தைகளால் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. எனினும் தற்போது திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்து வருகிறது.

மேலும் 'காலா' படத்தில் நேரடியாக தன்னுடைய அரசியல் கருத்தை சொல்லாமல், இளம் மறைக்காய்யாக, ரஜினி அரசியல் நோக்கத்தை இந்த படத்தில் உள்புகுத்தி உள்ளதாகவும் சிலர் தங்களுடைய, கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

இப்படி பல எதிர்ப்புகளை தாண்டி, விமர்னங்களை தாண்டி... 'காலா' திரைப்படம் இதுவரை தயாரிப்பாளர் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் பெற்று தந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.