kaala movie first release in southi arebiya after 35 years
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள காலா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் தொடந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு சவரிஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது.
அது தான் பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் 'காலா' படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
