kaala movie dubbing started today

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் படம் காலா. வொண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்தப்படம், கபாலி திரைப்படத்திற்குப் பின் சூப்பர் ஸ்டாரும் - பா.ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது. 

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், இணைந்து நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது