kaala movie dog owner saimen exclusive speech
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் வெளியாகியுள்ள 'காலா' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின், ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் படம் அருமையாக இருக்கிறது என்று கூறி, தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின் தலை காட்டி உள்ள, ஈஸ்வரி ராவ்வின் நடிப்பும் அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதே போல் சிறு வேடங்களில் நடித்த, அனைத்து நடிகர்களுக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 
அந்த வகையில் இந்த படத்தில் ரஜினி பயன்படுத்திய ஜீப்பை , மஹிந்திரா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துவிட்டதாம். இதனால் இந்த காரை தங்களது நிறுவன அருங்காட்சியகத்தில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஆனந்த் விருப்பம் தெரிவிக்க, நடிகர் தனுஷ் காலா படத்தின் ஜீப்பை பரிசாக அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தற்போது ரஜினியுடன் இந்த படத்தில் நடித்த மணி என்கிற பெயர் கொண்ட நாயும் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த நாய்க்கு பல பயிற்சிகள் கொடுத்து வளர்த்து வந்தவர் செல்ல பிராணிகளை வளர்த்து வரும் சைமன் என்பவர்.
இவரிடம் சிங்கப்பூரை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர், ஒருவர் ரஜினியின் நியாபகமாக இந்த நாயை வளர்க்க வேண்டும் என கூறி இரண்டு கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் சைமன் மணியை தன்னுடைய குழந்தையை போல வளர்த்துள்ளேன் ஆகவே, இதனை தன்னால் விலைக்கு தர முடியாது என கூறி விட்டாராம். ஆனால் எப்போதாவது தனக்கு மணியை கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் காசுக்காக கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை ஏசியாநெட் ஊடகத்திற்கு பிரத்தேயகமாக அவர் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
