kaala movie banned in abroads
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் தனுஸ் தயாரித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படம், வரும் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போதே பல ரசிகர்கள் தலைவரின் படத்தை எப்படி பிரமாண்டமாக வரவேற்பது என பல கட்ட வேளைகளில் இறங்கி விட்டனர்.
'காலா' படத்தின் ரிலீஸ் அன்று, ரஜினி ரசிகர்கள் எப்போதும் போல் பிரமாண்ட பேனர்கள், பால் அபிஷேகம், விசில், வெடி, ஆட்டம் பாட்டம் என திருவிழாவாகவே அன்றைய தினத்தை கொண்டாடி விடுவார்கள்.
தமிழகத்தில் ஒருபக்கம் ரசிகர்கள் 'காலா' திரைப்படத்திற்கு தயாராகி வந்தாலும். மற்றொரு புறமே சமீபத்தில் நடத்த தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றி ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கருத்தை தெரிவித்ததற்கு மிகபெரிய எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
போராட்டம் நடத்துபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒதுக்கவேண்டும், போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என அவர் கூறிய கருத்துக்கு சிலர் மத்தியில் அதிகம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம்' என்று நார்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழு தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுவிட்சர்லாந்திலும் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால். படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
