kaala move not released in karnataka
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தை திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தடை விதித்துள்ளது.
மேலும் 'காலா' படத்தை திரையிடக் கூடாது என்று 10 கன்னட அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 'காலா' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிட அரசு முயற்சி செய்யுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, 'காலா' திரைப்படத்தை வெளியிட கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை என்று கூறினார்.
மேலும் மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது, என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஏற்கனவே காலா திரைப்படம் திரையிட வேண்டாம் என முடிவு எடுத்து விட்டதாகவும், கர்நாடகாவில் காலா படம் வெளியாவதில் கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை, என்றும் கூறியுள்ளார்.
கன்னட முதல்வரின் இந்த அறிவிப்பால் 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது சந்தேகம் என தெரிகிறது. இருப்பினும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிட முயற் செய்யப்படும் என கூறப்படுகிறது.
