Asianet News TamilAsianet News Tamil

விஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா...கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்?...

’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.
 

juvala gutta posts a close still with vishnu vishal
Author
Chennai, First Published Jun 28, 2019, 5:35 PM IST

’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.juvala gutta posts a close still with vishnu vishal

நடிகர் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.இதையடுத்து விஷ்ணு, ஜூவாலாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காகத் தான் மனைவியை அவர் பிரிந்தார் என்றும் செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில்,’எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். எங்கள் நட்பு அதை தாண்டி அடுத்தக் கட்டத்துக்கு திருமணத்தை நோக்கிச் செல்லுமா என்பதை இப்போது சொல்ல இயலாது. நாங்கள் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார்.juvala gutta posts a close still with vishnu vishal

இந்நிலையில் அப்படிப்பட்ட குழப்பமெல்லாம் தேவையில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பது போல் ‘சில்லென்றிருக்கும் சென்னையில்’ என்ற பதிவோடு விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஜுவாலா கட்டா. கல்யாணச் சாப்பாடு போடுற மாதிரி ஐடியா இருக்கா இல்லைன்னா இப்பிடியே லிவிங் டுகெதர்னு செட்டில் ஆயிடுவீங்களா பாஸ்?

 

Follow Us:
Download App:
  • android
  • ios