சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுத்தவரையிலும் நடிகர் விஜய்யை பொறுத்தவரையிலும் அவரவர் ரசிகர்கள் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஜாம்பவான் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று முதலில் அனைவரையும் சொல்ல வைக்கும்... அதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் அஜித் சூர்யா என இவர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுத்தவரையிலும் நடிகர் விஜய்யை பொறுத்தவரையிலும் அவரவர் ரசிகர்கள் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஏதேனும் ஒரு படம் வெளியானால் அதற்கு முன்னதாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆரவாரம் ஆர்ப்பரிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம் ரசிகர்களின் அமர்க்களம்.

அந்தவகையில் பார்க்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்டை படத்தின் போதும் ஒரே கொண்டாட்டம் தான் ரசிகர்களுக்கு.... தற்போது வெளியாக காத்திருக்கும் தர்பார் படமாகட்டும் ரசிகர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அதே போன்று நடிகர் விஜய் பொறுத்தவரையில் அவர் நடித்து வெளியான சர்கார் படம் பெரும் வரவேற்பை பெற்றது இந்த நிலையில் வெளிவர உள்ள பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது இவை அனைத்தயும் தற்போது நம் கண்கூடாக பார்க்கிறோம். 

இந்த ஒரு தருணத்தில் சுமார் 32 வருடங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்களும் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.