ஜெயலலிதாவின்‘தலைவி’படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் நடிக்க மறுத்த பிரபலம்...

தெலுங்கில் ரீ மேக்கான அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் உள்ளிட்ட பல படங்களில் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.என்.டி.ஆருடனான சில காட்சிகளை படத்தில் வைக்க நினைத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க ஜூனியர் என்.டி.ஆரை படக்குழுவினர் அணுக அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்.டி.ஆர். போல் யாராலும் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். 

junior ntr rejects his grandpa charactor in thalaivi movie

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்துவரும் ‘தலைவி’படத்தில் தனது தாத்தா என்.டி.ஆர் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.junior ntr rejects his grandpa charactor in thalaivi movie

‘தலைவி’ என்ற பெயரில் படமாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி சில தினங்களாக நடைபெற்று வருகிறது.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார்.   junior ntr rejects his grandpa charactor in thalaivi movie

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆருடன் ஜெயலலிதா நடித்தது தொடர்பான சில முக்கிய காட்சிகளும் படத்தில் இடம்பெற உள்ளன. தெலுங்கில் ரீ மேக்கான அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் உள்ளிட்ட பல படங்களில் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.என்.டி.ஆருடனான சில காட்சிகளை படத்தில் வைக்க நினைத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க ஜூனியர் என்.டி.ஆரை படக்குழுவினர் அணுக அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்.டி.ஆர். போல் யாராலும் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios