‘மி டு’பஞ்சாயத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் நிலையில், தன்னை ஒரு பிரபல இயக்குநர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டுமானால் படுக்கைக்கு வரவேண்டும் என்று அழைத்ததாக நிறைய படங்களில் தோழியாக நடித்த நடிகை கூறியுள்ளார்.

ஷாலு சம்மு சமீபகாலமாக தோழி கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸ். நயன்தாரா தொடங்கி திவ்யா வரை பல நடிகைகளுக்கு தோழியாக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிட் அடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இவரை இன்னும் பிரபலப்படுத்தியது. அதே சமயம் சமீபத்திய பார்ட்டி ஒன்றில் மிக ஆபாசமாக நெருக்கமாக ஒரு ஆண் நண்பருடன் ஆடிய இவரது வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது.


இந்நிலையில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபல இயக்குனர் கூறியதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை ஷாலு சம்மு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் கூறிய ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், ஆனால் அப்போது அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவை வைத்துப் படம் இயக்கிய பிரபல இயக்குநர்களின் பட்டியலை அலசி ஆராய்ந்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.