ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு, அரசியல் தலைவர்கள் பற்றி அவதுறாக கத்தியே பிரபலமானவர் ஜூலி . பின் இதன் மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி கொண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 1, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

ஆரம்பத்தில் மற்ற பிரபலங்களை விட ஜூலியை தான் மக்கள் வரவேற்றனர். ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

பிஸியான ஜூலி:

நெகடிவ் விமர்சனங்களை மட்டுமே இவர் தொடர்ந்து பெற்றாலும், தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

பிறந்த நாள்:

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ஜூலிக்கு பலர் பிறந்த நாள் வாழ்த்து கூறினர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜூலி, ஒரு ட்விட் பதிவிட்டார். 

இதில் ஒரு ஆண் நபருடன் ஜூலி மிகவும் நெருக்கமாக நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதை பார்த்த பலர் "ஜூலி இது யார்...? உங்களுடைய காதலரா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்".

பதில் ட்விட்:

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக மற்றொரு ட்விட்டில் 'என் வலிமை மற்றும் வெற்றிக்கு பின்னால் உள்ள ராஜா இவர்தான் என குறிப்பிட்டு, மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

கண்டுக்கொள்ள படுவாரா ஜூலி?

ஜூலிக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த போதிலும் அதனை சற்றும் கண்டுக்கொள்ளாமல், தற்போது திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவர், நல்ல நடிகை என்று ரசிகர்களால் கண்டுக்கொள்ள படுவாரா என பொறுத்திருந்து பாப்போம்.