julie not follow samuthirakani words
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பீச்சில் ஒரு சில நாட்கள் கத்தி அனைத்து தொலைக்காட்சிகளின் பார்வையில் பட்டு பிரபலமாகி, தன்னை வீர தமிழச்சி என கூறி கொண்டு பிக் பாஸ் போட்டியில் நல்ல பிள்ளை போல் கலந்துக்கொண்டவர் ஜூலி.
ஆரம்பத்தில் சாதாரண ஒரு சாமானியப்பெண் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் பலர் இவரை ஆதரித்தனர். ஆனால் நாளடைவில் இவர் அங்கு நடந்துக்கொண்ட விதம் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் வெறுப்பு வரும் படி மாற்றி விட்டது.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இதில் கலந்துக்கொண்ட அனைவரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தனர். ஜூலியும் பல தொலைக்காட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டியளித்தார்.
இவருடைய பேட்டியை பார்த்து பலர் இவரை தாறு மாறாக விமர்சனம் செய்யத்தொடங்கினர். அப்போது நடத்தப்பட்ட பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் சமுத்திரக்கனி. ஜூலியிடம் மக்களுக்கு உங்கள் மேல் கொஞ்சம் கோபம் இருக்கிறது. அந்த கோபம் தணியும் வரை நீங்கள் பேட்டி கொடுப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுரை கூறினார்.
ஆனால் ஜூலி 'நீ என்ன சொல்வது அதை நான் என்ன கேட்பது' என கூறும் விதத்தில். மீண்டும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு சமுத்திரக்கனி கொடுத்த அறிவுரையை காற்றில் பறக்க விட்டுவிட்டார்.
தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியும் பிரபலமாகி விடவேண்டும் என்கிற முயற்சியில் உள்ள ஜூலி யார் என்ன கூறினாலும் கேட்கும் நிலையில் இல்லை என்று தான் தோன்றுகிறது.
