Julie like snake arthi give perfect example
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு வார விருந்தினராக வந்துள்ள ஜூலி, பொய், கோள் மூட்டுதல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது தன்னுடைய நிலைப்பாடு குறித்து ஹரிஷ் கல்யாணிடம் பேசுவது போலும் அதற்கு ஜூலியை திருத்தமுடியாது என ஆர்த்தி பேசுவது போலும் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் தனக்கு இப்போது வரை உள்ள கில்ட்டி பீல் என்னவென்றால் ஓவியாவின் விஷயம் தான், ஒரு வேலை பரணி அண்ணன் இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் எனறும் இவர்கள் இருவரும் வெளியே சென்றபோது இவர்கள் வெளியே போக நானும் ஒரு காரணம் என தன்னுடைய மண்டையில் தோன்றிவிட்டது என்றும், இவர்கள் இருவருமே மிகவும் அன்பானவர்கள் என நல்ல பிள்ளை போல் பேசுகிறார் ஜூலி.
இதற்கு பக்காவாக கமெண்ட் கொடுக்கும் விதத்தில் ஆர்த்தி பேசியுள்ளார், அதில் பாம்பு சட்டையை வேண்டுமானால் மாற்றும். இருந்தாலும் பாம்பு... பாம்பு தான், அதன் விஷம் மாறாது என்பது போல ஜூலி குறித்து பேசியுள்ளார். ஆர்த்தியின் இந்த கமெண்ட்க்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
