ஜல்லிக்கட்டில் போராடினேன் என்கிற முத்திரையை வைத்துக்கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஜூலி. முதலில் இவர் இதில் கலந்து கொண்டதில் தங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறிய அவருடைய குடும்பத்தினர் தற்போது ஜூலியை வெறுக்கிற நிலையில் இருப்பதாக ஜூலியின் தம்பி ஜோஷ்வா கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஜோஷ்வா, என்னுடைய அக்காவை சுதந்திரமாக நாங்கள் வளர்த்தது அவளுக்கு இந்த உலகை பற்றிய புரிதல் வேண்டும் என்பதற்காக தான்.

இதன் மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பங்கு பெற்றார். பிக் பாஸ் அழைப்பு வந்தபோது இது புது அனுபவமாக இருக்கும் என்று தான் அவரை அனுப்பிவைத்தோம். ஆனால் இவர் ஒவ்வொரு நாளும் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அருவருப்பாக தான் இருக்கிறது.

தினமும் என்ன பிரச்சனையை அவர் இழுத்து விடுவார் என கவலையாக இருக்கிறது. இதில் அவர் கலந்து கொண்டதால் அவரை பலர் தவறாகத்தான் பார்க்கின்றனர். எப்போது அவர் வெளியே வருவார் என்று தான் நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக ஜோஷ்வா மிகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.