julie fighting for suja

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அனைவருக்கும் விருது கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்த ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது இதில் முதலில் "நாடகக்காரி" என்கிற விருதை சுஜாவிற்கு ஜூலி கொடுக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த விருதை பெற்றுக்கொண்ட சுஜா "இந்த விருதை மிக பெரிய நாடகக்காரி கையால் வாங்குவதற்கு ரொம்பவே சந்தோஷப்படுவதாக மிகவும் கோபமாக கூறினார்". இதை தொடர்ந்து "மந்தம்" என்கிற விருதை பிந்து மாதவிக்கு கொடுக்கிறார் ஜூலி.

ஜூலியை தொடர்ந்து ஆர்த்தி, கணேஷுக்கு "சுயநலவாதி" என்கிற விருதை வழங்குகிறார். இவரை தொடர்ந்து புது விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள ட்ரிகெர் சக்தி, சினேகனுக்கு "தந்திரக்காரன்" என்கிற விருதை கொடுக்கிறார்.

இதற்கு பின் சினேகன் சக்தியுடன் ரூமில் பேசும் போது, என்னை விமர்சனம் செய்வதற்கு என்னைவிட வேறு யாருக்கும் அருகதை இல்லை என்கிறார். மேலும் நாடகக்காரி என ஜூலி விருது கொடுத்ததால் கடுப்பான சுஜா, நான் இத்தனை நாட்கள் நடிக்க வில்லை... ஆனால் இதில் இருந்து இந்த நிமிடத்தில் இருந்து நான் யார் என நடித்து காண்பிக்கிறேன் என அழுது கொண்டே கூறுகிறார்... தொடர்ந்து என்ன நடக்கும் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.