Julie fight her parents
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பீச்சில் கத்திக் கத்தியே பிரபலமானவர் ஜூலி. இவர் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் இவருடைய உண்மையான குணம் வெளிவந்தது. இதை பார்த்து இவரை ஆதரித்த பலர் இவரை வெறுக்க தொடங்கிவிட்டனர்.
.jpg)
ஏற்கெனவே ஒரு சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள ஜூலிக்கு தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
ஏற்கனவே ஜூலி செய்த வேலையால் அவருடைய பெற்றோர் வெளியே தலை காட்ட முடியாமல் உள்ளனர். இவருடைய சொந்த பந்தங்களும் ஜூலியை அசிங்கப்படுத்தி வருகின்றனராம்.

ஏற்கனவே ஜூலியின் தம்பி, தன்னுடைய அக்கா கண்டிப்பாக படங்களில் நடிக்க மாட்டார் என கூறி இருக்கும் நிலையில், ஜூலிக்கு திடீர் என நடிக்கும் ஆசை வந்துவிட, இவரை படங்களில் நடிக்க வைக்க அணுகும் ஒரு சில தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் நடிக்க சரி என்று கூறுவதுபோல் பேசியுள்ளாராம்.

இதனை அறிந்த அவருடைய பெற்றோர் மற்றும் தம்பி கண்டிப்பாக நடிக்கக் கூடாது என கூற, தனக்கு நடிக்க வாய்ப்பு வருகிறது இதை நான் இப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பெற்றோருடன் சண்டை போட்டு வருகிறாராம் ஜூலி.
