Asianet News TamilAsianet News Tamil

கலா மாஸ்டருடன் நடனம்... அவமானப்படுத்தி ஓரம்கட்டப்பட்ட ஜூலி..!

julie dance with kala master
julie dance with kala master
Author
First Published Nov 19, 2017, 1:05 PM IST


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் செவிலியர் ஜூலி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது செவிலியர் வேலையை தூக்கி எரிந்து விட்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

julie dance with kala master

இவர் ஏற்கனவே பல இடங்களில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், எதையாவது ஒன்றை பேசி நல்லா வாங்கி கட்டிக்கொள்வார்.
இதற்காக இவருக்கு பலர் அறிவுரை கூறியும் இவர் யாருடைய பேச்சையும் மதிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஜூலி  தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியின் நிறைவில் கலா மாஸ்டர் "ராதை மனதில்..." என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நடனம் இவர் ஆடி கொண்டிருக்கும் போதே ஜூலியும் நடுவில் நடனமாடியுள்ளார். 

julie dance with kala master

இதை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள், ஜூலி எட்ட போ... உன் டான்ஸ் கேவலமா இருக்கு என்று கத்தியுள்ளனர். இதில் அவமானப்பட்ட ஜூலி பின் நடனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் ஓரமாக நின்று விட்டார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios