julie advertisement salary

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் அனைவருடைய வெறுப்பை மட்டுமே சம்பாதித்துக்கொண்டு வெளியேறியவர் ஜூலி.

காரணம் பிரபலங்கன் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் ஒரு சாதாரண பெண்ணாக கலந்துக்கொண்ட இவரை ஆரம்பத்தில் பலர் ஆதரித்தனர். ஆனால் இவர் அனைவருடைய எதிபார்பையும் பொய்யாக்கும் வகையில் நடந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின் பல்வேறு நிகழ்சிகளிலும் கலந்துக்கொண்டு அவமானங்களை சந்தித்த இவர்.. அனைத்தையும் பொறுத்துக்கொண்டு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார் என்று தான் கூறவேண்டும்.

தற்போது ஜூலி, பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுவது மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இதே போல் சமீபத்தில் இவர் அப்பளம் நிறுவனத்திற்காக நடித்துள்ள விளம்பரம் பரவலாக சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் அந்த 5 செகண்ட் குறித்து கூட ஜூலி பேசியுள்ளார். 

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஜூலி இந்த ஒரு விளம்பரத்தில் நடிக்க 10 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் உறுதியானா என்று தெரியவில்லை.