julie acting old grandma character

ஜல்லிக்கட்டு ஜூலி: 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்களை பற்றி கண்ட படி கத்தியே, வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர்.

பிக் பாஸ் போட்டியாளர்: 

ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். அதில் தனது உண்மை முகத்தை காட்டி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.அதன் பிறகு பிக்பாசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நடிகை: 

தனது ஆசைப்படி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆகி விட்டார். சமீபத்தில், இல்லத்தரசி கெட்டப்பில் அப்பள விளம்பரத்தில் நடித்து அசத்தினார். தற்போது ஜூலி ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை ஏற்கனவே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே விமலின் "மன்னர் வகையறா" படத்திலும் ஒரு கதாபத்திரத்தில் தலை காட்டியுள்ளார். இந்நிலையில், ஜூலி வயதான கிழவி போல் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஜூலி நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

வைரல் ஆகி வரும் அந்த புகைப்படம் இதோ: