ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி என்பது ஒருவரை சார்ந்த வெற்றி இல்லை ஒட்டு மொத்த இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் தான் பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த போராட்டத்தின் மூலம் வெளியே தெரியப்பட்ட ஜூலி பிரபலங்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 

பிரபலங்கள் மத்தியில் போராளியாக காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலர் தங்களுடைய ஆதரவை அவருக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் நாட்கள் போக போக... ஜூலியின் சுய ரூபத்தை அறிந்த பலருக்கு அவரை பிடிக்காமல் போய் விட்டது. இந்நிலையில் இவர் நடித்த ஒரு ஆல்பத்தின் பாடலும் வெளியாகியது. இந்த பாடலை இயக்கிய ஜூலியின் நண்பர் ஒரு வலைத்தளத்திற்கு பேட்டியளிக்கும் போது...

யாருக்கும் கிடைக்காத பொன்னான வாய்ப்பு, ஜூலிக்கு கிடைத்துள்ளது. ஆனால் ஜூலியின் கெட்டபுத்தியால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் இன்றி, அவரையும் அசிங்கப்படுத்திக்கொண்டார். இனி அவர் ஒரு போராளி என கூறிக்கொண்டு ஏதாவது போராட்டத்தில் கலந்து கொண்டாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் இவரை வைத்து நான் ஒரு பாடலை இயக்கியதால் மக்கள் மற்றும் இன்று எங்களுடைய நண்பர்களே தங்களை தவறாக நினைத்து ஒதுக்குகிறார்கள் என வேதனையோடு தெரிவித்துள்ளார்.