பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், ஜூலியை தரையில் கால் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது.  இந்த டஸ்கில் ஓவியாவை பழிவாங்க ஜூலி தனக்கு ஓவியா தான் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என ஆர்டர் போட்டார்.

இந்நிலையில் தன் மீது பொய் குற்ற சாட்டுகள் வைத்த இவருக்கு தன்னுடைய தன்மானத்தை விட்டு ஏன் வேலை செய்யவேண்டும் என்று எண்ணிய ஓவியா ஜூலியை கிழே விழவைத்து அசிங்கப்படுத்தினார்.

ஒரு நிலையில் இவர்களை இப்படியே விட்டால் பிரச்சனை முற்றி விடும் என்று எண்ணி சக்தி ஜூலியை தூக்கி கொண்டு போய் அவரது படுக்கையில் விட்டார். இதனை எண்ணி ஜூலி தன்னை தானே புகழ்த்து பேசிக்கொண்டார்.

அவர் பேசுகையில் "என்ன ஒரு கிப்ட்,  கால் கீழே படக்கூடாது என்று என்னை தூக்கிக்கொண்டு வந்து எங்க அண்ணன் பெட்டில் போடுறாங்க.. நீ  எப்படி ஒரு குடும்பத்தை சேர்க்கணும் என்று நினைச்சியோ அப்படியே சேத்துட்ட. மேலும் உனக்கு ஒன்னுன்னா செத்துட்டாலும் அழுகுறத்துக்கு நாலு பேர் இருக்காங்க என்று தன்னை தானே பெருமையாக பேசி கொண்டு தனக்கு தானே முத்தமும் கொடுத்து கொள்கிறார்.

ஆனால் பார்ப்பவர்களுக்கு ஜூலி இப்படியெல்லாம் செய்வது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.