ரசிகர்களில் செல்லமாக மாறிவிட்டார் பிக்பாஸ் ஓவியா. இந்நிகழ்ச்சியில் அவர் மட்டுமே தான் ரியல் என்பது பலரின் கருத்து. ஓவியா அப்பா, அம்மாவை இழந்தவர். தைரியமும், குறும்பும் தான் அவரது லைஃப் ஸ்டைல் என்பது டிவியை பார்த்தாலே தெரிகிறது.

ஆரம்ப நாட்களில் ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் இருந்தது. தன் எண்ணத்தையும் வெளிப்படையாக கூறினார். ஆனால் காதலிக்காமலே இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

மேலும் ஓவியாவுக்கு இருக்கும் ஒரே ஃபிரண்ட் ஆரவ் தான். சமீபத்தில் கூட 25 வருடமாக நான் தேடிய ஒருவர் தான் ஆரவ் என தன் வாழ்கை துணையின் எதிர்பார்ப்பை கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் ஓவியா ஆரவ் இருவரின் காதல் பற்றி மற்றவர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். இதில் ஓவியா ஆரவை செல்லமாக சீண்டுவது ஒருபுறம் இருக்க, ஜூலியோ ஆரவ் ஓவியாவிடம் நெருக்கமாக இருப்பது பிடிக்கவில்லை என்பது போலவும், மேலும் அவனை துவைத்து காயப்போட்டு விடுவேன் என கூறி பொறாமையின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் காயத்திரி, ஆரவ் போய்விட்டால் லவ் ஸ்டோரி எப்படி இருக்கும் என கேட்கிறார். இதனால் அனைவரும் அடுத்து ஆரவை கார்னர் செய்கிறார்களா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.