joy christella marriage engagement

திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், நக்குல், ‘கயல்’ சந்திரன், தொகுப்பாளினி அஞ்சனா சந்திரன், நடிகைகள் சுஜா வருணீ, அதுல்யா ரவி, இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ, எடிட்டர் ரூபன், பின்னணி பாடகி சைந்தவி, வி ஜே ரம்யா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ராஜதந்திரம், ஜில்லா, கீ, உள்குத்து, கதாநாயகன், ரிச்சி, கணிதன், டார்லிங், வான் உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஸில்டா திருமணம் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இதோ...