jothika give the lady super title for famous actror
பலருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் என்றால், உடனே நினைவிற்கு வருவது நடிகை நயன்தாரா தான். பெயருக்கு ஏற்றாப்போல் அவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களும் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள மகளிர் மட்டும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது
இதில் சூர்யா, கார்த்தி, சிவகுமார் என பலரும் கலந்துக்கொண்டனர், இதில் ஜோதிகா பேசுகையில் ‘இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுக்கோள்.
எப்போதும் ஹீரோக்களுக்காக மட்டுமே படம் எடுக்கின்றீர்கள், ஹீரோயின்களுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள்.
மேலும், இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஆனால் அவர்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் சரண்யா பொன்வன்னன் தான், அவர் பல திறமைகளை கொண்டவர்’ என புகழ்ந்து தள்ளினார்.
