கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா, இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த பின்பு சில காலம் திரைத்துறையை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

தற்போது இவர்களுடைய குழந்தைகள் வளர்ந்து விட்டதால், மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தான் நடிக்கும் கதைகளை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களாக அமைந்தாது.

இந்நிலையில் தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான நல்லெண்ண தூதுவராக ஜோதிகா மற்றும் விவேக் ஆகிய இருவரையும் தமிழக முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார்.

விரைவில் ஜோதிகா மற்றும் விவேக் இருவரும் தமிழக மக்களிடம் பிளாஸ்டிக் பற்றிய தீமைகள் குறித்து விழிபுனர்கள் ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து இந்த மிகப்பெரிய பதவியை பெற்றுள்ள இவர்களுக்கு கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.