நடிகை ஜோதிகா '36 வயதினிலே' படத்தின் ரீ-என்ட்ரிக்கு பிறகு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் ஜோதிகா, மற்றும் நடிகை ரேவதி இணைந்து நடித்துள்ளனர்.

சரியாக 35 நாட்களில் முடிவடைந்தது இந்த படத்தின் படப்பிடிப்பு. இதை தொடர்ந்து தற்போது போஸ்ட்-ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் கூடிய டைட்டில் இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

 

அதன்படி தற்போது ஜோதிகா மற்றும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் 'ஜாக்பாட்' என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த படத்தின் போஸ்டரில், ஜோதிகா ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து, ஒரு வண்டியின் மீது ஏறி நின்று போஸ் கொடுப்பது போல் உள்ளது.  மற்றொரு போஸ்டரில் ஜோதிகாவும் ரேவதியும் போலீஸ் உடையில் உள்ளனர்.  இதிலிருந்து ஜோதிகா 'நாச்சியார்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என என்பது தெரியவந்துள்ளது.