நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் முதல் முதலாக ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் '36 வயதினிலே' இந்த படத்தை தொடர்ந்து குடும்பம் மற்றும் திரைப்படம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த 'மகளிர் மட்டும்' , 'நாச்சியார்' ஆகிய படங்கள் அவருக்கு ஹார்ட்ரிக் வெற்றிப்படங்களாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த 'துமாரி சுலு' என்கிற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை, ஏற்கனவே ஜோதிகாவை வைத்து 'மொழி' படத்தை இயக்கிய, இயக்குனர் ராதா மோகன் இயக்க உள்ளார்.

துமாரி சுலு:

'துமாரி சுலு' படம் ஒரு நடுத்தர வயது பெண் 'வானொலியில் ஆர்.ஜே.வாக பணியில் சேர்ந்தவுடன் அவளுடைய வாழ்கை எப்படி மாறுகிறது என்பதை இயல்பாக கூறும் திரைப்படம்.

இந்த படத்தில் வித்யாபாலன் சுலோச்சனா என்கிற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ராதா மோகன் இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தபோது ஜோதிகா இந்த கதாப்பாத்திரதிக்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணி அவரை அணுகியதாகவும். கதையை கேட்டவுடன் இந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.