Asianet News TamilAsianet News Tamil

வானொலி தொகுப்பாளர் ஆகிறார் ஜோதிகா...!

jothika acting radio jockey role
jothika acting radio jockey
Author
First Published Feb 28, 2018, 7:10 PM IST


கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெளிணின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். .

‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழாக்க உரிமையை சென்னையின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தற்போது ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை தயாரித்து வருகிறது.  இதில் நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்தி, ரெஜினா, வரலட்சுமி உட்பட மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிறுவனம் இதற்கு முன் ‘ஜீரோ’, ’இவன் தந்திரன் ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான, ‘துமாரி சுலு’வின் தமிழ்ப் பதிப்பில் இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கிறார். 

குடும்பத் தலைவியான பெண் ஒருவர் நிகழ்ச்சித்தொகுப்பாளராகி நடத்தும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று ஹிட்டாகிறது. இந்தத் தொகுப்பாளினி இயல்பான தனது குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை இயக்கும் ராதா மோகன் கூறுகிறார்: ‘‘இந்தியில் வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படத்தைத் தமிழில் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜோதிகாவுடன் ‘மொழி’ படத்தில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் மீண்டும் பணிபுரியக் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.

‘தொகுப்பாளினி’ ஜோதிகா சொல்கிறார்: ‘‘நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை. நான் அவரது படங்கள் எதையும் தவற விட்டதில்லை. அவரது குரல் எனக்கு பிகவும் பிடிக்கும். அவரது உச்சரிப்புத் பாலிவுட்டில் அரிதான விஷயம். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது ‘துமாரி சுலு’. வித்யாபாலன் நடித்த வேடத்தை தமிழில் நான் நடிப்பது, என்னை கௌரவப்படுத்துவதாகவே கருதுகிறேன். 

தயாரிப்பாளர் குடோஸ், இயக்குநர் சுரேஷ் த்ரிவேணி கூட்டணி உருவாக்கிய ‘துமாரி சுலு’ எல்லோரும் விரும்பக் கூடிய, நேர்மையான, யதார்த்தமான ஒரு நல்ல படம். என தெரிவித்தார்.

இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியான போது இந்தியா முழுக்கப் பரவலான வரவேற்பு பெற்று. விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற படமும் கூட அமைந்தது. 20 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான இந்தப் படம், 50 கோடி ரூபாய் வசூலித்து மகத்தான வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் நடித்ததற்காக வித்யா பாலன் விருதுகளும் பல பெற்றார்: சிறந்த நடிகை & ஃபிலிம்ஃபேர் 2017, சிறந்த நடிகை & ஸ்டார் ஸ்க்ரீன் விருது 2017. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை சுரேஷ் திரிவேணியும், சிறந்த துணை நடிகைக்கான விருதை நேகா துபியாவும் ஸ்டார் ஸ்க்ரீன் மூலம் இந்தப் படத்துக்காகப் பெற்றனர்
 

Follow Us:
Download App:
  • android
  • ios