சாதாரண எழுத்தாளர்களே சாகாவரம் பெற்றவர்கள் எனும்போது ஆசான் ஜெயமோகனின் அந்தஸ்துக்கு சொல்லியா தெரியவேண்டும். அவரது புளிச்சமாவு மேட்டர் முடிந்து வெற்றிகரமான 2 வது தொடங்கியுள்ள நிலைமையிலும் மாவு மேட்டர் இன்னும் சூடு ஆறாமலே இருக்கிறது. ஆசானை உடனே கைது செய்தே ஆகவேண்டும் என்று இன்று நாகர்கோவில் மகளிர் சுய உதவிக்குழு நல அமைப்பினர் தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

போலீஸார், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் அத்தனைபேரும் உள்ளே புகுந்து அலசி அராய்ந்து முடிவுக்குக் கொண்டுவந்த ஜெயமோகனின் புளிச்சமாவு மேட்டர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று அனைவரும் நினத்துக்கொண்டிருந்த நிலையில் இன்று நாகர்கோவில் முழுக்க ஜெயமோகனால் தாக்கப்பட்ட மாவுக்கடைப் பெண்ணுக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் என்ற புதுப் பதவி கொடுத்து ஆசானை வம்பிழுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்று நகரம் முழுக்க ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ,...தமிழக அரசே காவல்துறையே ...பார்வதிபுரத்தில் சுய உதவித் தொழில் செய்துவரும் எங்கள் சுய உதவி குழு உறுப்பினரை பெண் என்றும் பாராமல் தாக்கிய புளிச்சமாவு ஜெயமோகனை உடனே கைது செய் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களை வழக்கம்போல் ரசித்து ஷேர் செய்துவரும் ஜெயமோகனின் விழுதுகள் ‘எங்க ஆசான் ஞானபீடம்,பத்மஸ்ரீ பட்டங்களே தன்னை அண்ட விடாம பாத்துக்கிட்டாரு... அவருக்குப் போயி புளிச்சமாவுன்னு ஒரு பட்டமா என்று நிஜமாலுமே ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.