jemini ganesan daugter kamala angry talk for savithiri moive

சமீபத்தில், தெலுங்கில் 'மகாநதி' என்றும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் , நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி தேவியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசனாக நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த கதாப்பாத்திரம் (ஜெமினி கணேசன்) கொஞ்சம் வில்லத்தன்மை கொண்ட சாயலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெமினிகணேசனின் மகள் கமலா செல்வராஜ், 'மகாநதி' படத்தில் தன்னுடைய தந்தையை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பிரபல தொலைக்காட்சிக்கு பிரதேயகமாக பேட்டி கொடுத்த இவர், "அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் இணைத்து எனது தந்தை, ஜெமினியையும் மும்மூர்த்திகள் என அழைத்தனர். ஆனால் எனது தந்தையை பட வாய்ப்பே இல்லாத நடிகர் போல காட்டியுள்ளார்கள். மேலும் சாவித்திரிக்கு குடிக்கும் பழக்கத்தை கற்று கொடுத்தவர் என் தந்தை தான் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் துளியும் உண்மை இல்லை.

அப்படி என்றால் என் அம்மாவுக்கும் என் தந்தை குடி பழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கலாம் என மிகவும் கோபமாக பேசினார். சினிமாவில் இருப்பவர்களுக்கு குடி பழக்கத்தை யாரும் கற்றுக்கொடுக்க தேவை இல்லை, அவர்கள் கலந்துக்கொள்ளும் விழாக்களில் அவர்களே தான் கற்றுக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் சாவித்திரி சிவாஜியை வைத்து தமிழில் 'பிராப்தம்' என்கிற படத்தை தயாரிக்க முடிவு செய்த போது, அது வேண்டாம் என கூறி அவரது மனதை மாற்ற என் தந்தை ஜெமினி கணேசன் அவரை தேடி சென்றார். 

ஆனால் அவரோ உள்ளே கூட நுழையவிடாமல் காவலாளியையும், நாயையும் விட்டு துரத்தினார் சாவித்திரி. அதனாலேயே அதன் பின்னர் என் தந்தை. சாவித்ரியை பார்க்க செய்வதை நிறுத்திவிட்டார் என மிகவும் வேதனையோடு கூறியுள்ளார் கமலா.