நடிகர் ஜீவா நடிப்பில், சமீபத்தில் 'கீ' மற்றும் 'கொரில்லா' ஆகிய படங்கள் வெளியான நிலையில், தற்போது ஜீவா நடித்து முடித்துள்ள மற்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

அந்த வகையில் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' திரைப்படம் சென்சாருக்கு சென்றபோது ஒரு சில பிரச்சனைகள் எழுந்தது. பின் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர் சென்சார் அதிகாரிகள்.

அதைத்தொடர்ந்து, ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்தின் சென்சார் தகவல்கள் வெளியான போதிலும், இதுவரை அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், 'சீறு' திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே 'சீறு' படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், இப்போது 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த படத்தை இயக்குனர் ரத்ன சிவா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் லட்சுமி மேனன் நடித்த 'ரெக்க' படத்தை இயக்கியவர்.  இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் அறிமுகமாகியுள்ளார். மேலும் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஹீரோவாக நடித்து,  நவ்தீப் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.