Kathanar First Look Poster : அனுஷ்கா பேயாக நடித்து வரும் கத்தனார் என்ற மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Kathanar First Look Poster : 'ஹோம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ரோஜின் தாமஸ் இயக்கும் படம் கத்தனார். ஜெயசூர்யா நாயகனாக நடிக்கிறார். படத்தின் முதல் தோற்றத்தை கோகுலம் மூவிஸ் வெளியிட்டுள்ளது. ஜெயசூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கத்தனார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
212 நாட்கள் மற்றும் 18 மாதங்கள் கொண்டு ரோஜினும் குழுவினரும் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். மலையாளத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். 75 கோடி பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், வங்காளம், சீ்னா, பிரெஞ்சு, கொரியன், இத்தாலி், ரஷ்யன், இந்தோனேஷியன், ஜப்பானியம், ஜெர்மன் என 15 மொழிகளில் படம் வெளியாகும்.
கடந்த 2023்ஆம் ஆண்டு தொடங்கி கத்தனார் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 ஏக்கரில் 45,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. அனுஷ்கா ஷெட்டி, பிரபுதேவா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 3D தொழில்நுட்பத்தில் கத்தனார் படம் தயாராகி வருகிறது. ஜெயசூர்யாவின் கடைசி படம் 'எண்டாடா சஜி'. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கும் ஆடு 3 தயாரிப்பில் உள்ளது.
