நடிகர் ஜெயம் ரவி சமீபகாலமாகவே, மிகவும் வித்தியாசமான கதைகளையும், தரமான கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' , 'அடங்கமறு' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வெற்றிபெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.  இதுவரை ஜெயம் ரவி நடித்த படங்களை விட இந்த படத்திற்கு அதிக அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி வசூலை எட்டியது.

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி, தன்னுடைய 25 ஆவது படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் லக்ஷ்மன், 'ரோமியோ ஜூலியட்', மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. டி. இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இதைத் தொடர்ந்து ஜெயம்ரவி இயக்குனர் அகமது இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 26 ஆவது படமாக உருவாகும் இப்படம்  தேசப்பற்று மிக்க ராணுவ வீரராக இவர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு 'ஜனகனமன' என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.