ஜெயம் ரவியை வைத்து, ரோமியோ ஜூலியட் என்கிற வெற்றி படத்தை கொடுத்த லட்சுமண் இப்போது மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமியை வைத்து இயக்கிவரும் படம் போகன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
இந்த விழாவில் தயாரிப்பாளர் பிரபுதேவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே பிரபுதேவா 2011ஆம் ஆண்டு இதே ஜோடியை வைத்து 'எங்கேயும் காதல்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் பேசிய பிரபுதேவா, 'ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டார். 

இந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசிய அவர் 'சினிமாவில் பல நுணுக்கங்களை ஜெயம் ரவி அறிவார் என்றும் அவரை ஒரு குட்டி கமல்ஹாசன் என்று அழைக்கலாம் என்று கூறினார். 

மேலும் 'எங்கேயும் காதல்' படத்தில் ஹன்சிகா நடித்ததற்கு 'போகன்' படத்தில் நடித்ததற்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் நடிப்பில் ஹன்சிகா பெருமளவு மெருகேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.