திரைப்பட கலைகர்களுக்கு வழங்கப்படும், விருதுகளில் ஒன்று சைமா விருதுகள்.  இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி,  கத்தாரில் நடைபெற்றது. 

இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்த பல கலைங்கர்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என பல்வேறு பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை நடிகர் தனுஷும், சிறந்த நடிகைக்கான த்ரிஷாவும் பெற்றனர். 

மேலும் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது 'அடங்கமறு' படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்பா மகன் என இருவருமே, சைமா விருது வழங்கப்பட்டது ஜெயம் ரவி ரசிகர்களையும், அவருடைய குடும்பத்தினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு பலர் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.