ஜெயலலிதா திறமையான நடிகை என்று பலருக்கு தெரியும், அவர் இனிமையாக பேச மட்டும் அல்ல படவும் செய்வார் என்பது அறிந்தவர்கள் குறைவு தான்.

இவர் நடித்த பல படங்களில் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

அவர் பாடிய பாடல்கள்:

அடிமை பெண் படத்தில் - அம்மா என்றால் அன்பு....
சூர்யா காந்தி படத்தில் - ஓ மேரி தில் ரூபா....
வந்தாலே மகராசி படுத்தில் - கண்களில் ஆயிரம்....
வைரம் படத்தில் - இரு மாங்கனி போல்....
அன்பைத்தேடி படத்தில் - சித்திர மண்டபத்தில்.....
திருமாங்கல்யம் படத்தில் - திருமாங்கல்யம் கொள்ளு முறை..... மற்றும் பொற்குடத்தில் பொங்கும் எழில் சுவையோ ....
உன்னை சுற்றும் உலகம் படத்தில் - மெட்ராஸ் மைல் போன்ற சினிமா பாடல்களை பாடி உள்ளார்.

மேலும் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மாரி வரும் உலகினிலே' 'மாரியம்மா முத்து மாரியம்மா' , 'காளி மகமாயி ', 'தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்', போன்ற பக்தி பாடல்களையும் ஆல்பங்களிலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.