Asianet News TamilAsianet News Tamil

வெள்ளித்திரையில் .......!!! ஜொலித்த ஜெ.....நட்சத்திரம்......!!!

jayalalitha movies
Author
First Published Dec 6, 2016, 8:25 AM IST


தன் 15 வயதில் ஆங்கில படம் மூலமாக தன் நடிப்பின் பயணத்தை தொடங்கினார் ஜெயலலிதா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஏடிசில்' திரைப்படம் அவருக்கு எந்த பாராட்டையும் பெற்று தர வில்லை.

இதன் பின் கன்னடப்படத்தில் 1964 இவர் அறிமுகம் குடுத்த' சின்னடா கொம்பே' திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைத்தது பலராலும் இவரது நடிப்பு ரசிக்க பட்டது.

இதை தொடர்ந்து 1965ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' படத்தில், தமிழில் அறிமுகம் ஆகி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் நடித்த பல தமிழ் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஸ்கர்ட் அணிந்து நடித்த நடிகை என்கிற தனி சிறப்பும் இவருக்கு உண்டு.

1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிகாடா பட்டினமா' என்கிற படத்திற்கு தேசிய விருதை தட்டி சென்றார்.

மேலும் இவர் சிவாஜியுடன் நடித்த 'கலாட்டா கல்யாணம்', 'தெய்வ மகன்' போன்ற படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான விருதை பெற்றது .

இவர் எம்.ஜி.ஆர் ருடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.அதே நேரத்தில் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது ஜோடியில் ஆரமித்த 'ஆயிரத்தில் ஒருவன்',  'காவல் காரன்',' அடிமை பெண்', 'எங்கள் தங்கம்',' குடி இருந்த கோவில்', 'ரகசிய போலீஸ்', 'நம் நாடு' என பல வெற்றி படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் முன்னனி நடிகர்களாக வளம் வந்த ஜெய்சங்கர், முத்துராமன், சிவாஜி, ரவிச்சந்திரன், சிவ குமார், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்தது 1980 தில் 'வெளிவந்த நதியை தேடி வந்த கடல் பயணம் 'என்கிற திரைப்படம். இதில் சரத் பாபு ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios