மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் 'தலைவி' கதாபாத்திரத்தில், அதாவது ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய போஸ்டர் வெளியான போது, ஜெயலலிதா போல் துளியும் சாயல் இல்லாத பாலிவுட் நடிகையை ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து வெளியான போஸ்டர்களில், கங்கனா ரணாவத் அச்சு அசல் ஜெயலலிதா போல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் மற்றொரு முன்னணி கதாபாத்திரமான எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி, நடித்துள்ளார். அதே போல் பிரகாஷ் ராஜ், நடிகை பூர்ணா, மதூ, வித்யா பிரதீப், நாசர், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே 'தலைவி' படத்திற்காக சங்கமித்து நடித்துள்ளனர்.

மிக பிரமாண்டமாக உருவாகி வரும், இந்த படத்தின்... ரிலீஸ் தேதி ஜெயலதித்தலின் புதிய மோஷன் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான, 'குயீன்' வெப் சீரிஸுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்திற்கும் அதே போல் வரவேற்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
