emerging actresses latest post on Instagram
இந்தியத்திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக மின்னி மறைந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவரின் இழப்பை இன்றளவும் நம்ப முடியாமல் வருந்திவருகின்றனர் இவரின் ரசிகர்கள். ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பமும் அவர் நினைவால் மிகுந்த வருத்தத்தில் இருந்துவருகிறது.
நேற்று உலகெங்கிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. நடிகை ஸ்ரீ தேவிக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தமகளான ஜான்வீ கபூர் நடித்திருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் ”தடக்” விரைவில் ரிலீசாக உள்ளது.

அன்னையர் தினமான நேற்று ஜான்வி இன்ஸ்டாகிராமில் சிறுவயதில் தன் தாய் ஸ்ரீ தேவியுடன், ஒரு இனிமையான தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தன் அன்னையை நினைத்து எந்த விதாமான வார்த்தைகளையும் அவர் அந்த படத்தில் கொடுக்கவில்லை என்றாலும், ஜான்வி ஸ்ரீ தேவியின் பிரிவால் ஏங்குவதை அந்த படம் வெளிப்படுத்துவதாகவே நமக்குத் தோன்றுகிறது.
