நடிகை சமந்தா நடிப்பில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படமான, 'ஓ பேபி' படத்தின் இந்தி ரீமேக்கில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

'ஓ பேபி' திரைப்படம் கொரிய மொழியில் வெளிவந்த 'மிஸ் கிரானி' என்ற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட இடைவெளிக்கு பின், பழம்பெரும் நடிகை லட்சுமியும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், தற்போது இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன் படி இந்த படத்தின் ரீமேக்கில், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர், அவருடைய தந்தை போனிகபூர் தயாரிப்பில் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு புறம், இதே படத்தின் ரீமேக்கில் நடிகை ஆலியாபட்  மற்றும் ராணா நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அனால் இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.