இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜெனிலியா,  குறைவான படங்களில் நடித்தாலும் 'சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த இவர்... லைம் லைட்டில் இருக்கும் போதே...  2012ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் 6 வருடங்கள் கழித்து, ஜெனிலியா தயாரிக்க அவரது கணவர் ரித்தேஷ்முக் கதாநாயகனாக நடித்துள்ள 'மௌலி' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். 

திருமணத்திற்கு பின் இவர் ஒரு ஹிந்தி, ஒரு மராத்தி படத்தில் சில வினாடிகள் மட்டுமே இடம் பெறும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். 

ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்தது பற்றி இவருடைய கணவர் ரித்தேஷ் கூறுகையில், “படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்று வைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, அதில் ஜெனிலியா மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்,” என்றார். கணவருடன் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் தோன்றுகிறார் ஜெனிலியா என்று தெரிவித்துள்ளார்.