janani punishment give the mahath
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் மஹத், பலாஜியுடம் செம சண்டை போட்டார். பின், வயது வித்தியாசம் பார்க்காமல் பாலாஜியை திட்டியதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.
இதைதொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த 'திருடன் போலீஸ்' டாஸ்க் வேண்டவே வேண்டாம் என்றும் இதனை மிகவும் மோசமாக சில போட்டியாளர்கள் விளையாடி வருவதாக கூறி பிக்பாஸ்சிடம் போட்டியாளர்கள் முறையிட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்.. நடிகை ஜனனி நாட்டாமை பொறுப்பை வகிப்பது போல் உள்ளது. இந்த பொறுப்பிற்கு ஏற்றாப்போல் தோளில் துண்டு போட்டவாறு 'மஹத் நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை என கூறி, அது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என கூறுகிறார்.
இதற்கு மஹத் நான் அதிகம் கோவப்பட்டுள்ளேன், அதே போல் திட்டியுள்ளேன் என தன்னுடைய தவறுகளை முன்வந்து ஒற்றுக்கொள்கிறார்.
இதைதொடர்ந்து பேசும் ஜனனி, மஹத்தின் இந்த செய்கையால் இவருக்கு இன்று ஜெயில் தண்டனை கொடுப்பதாக தெரிவிக்கிறார்.
பின் ஜெயிலில் மஹத் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் தயவு செய்து வரும் சனிகிழமை வரை தன்னை ஜெயிலில் இருந்து எடுக்க வேண்டாம் என மனம் உருகி பிக்பாஸ்க்கு கோரிக்கை வைக்கிறார் மஹத்.
மஹத் வைக்கும் கோரிக்கை ஏற்க்கப்படுமா..? இவரின் இந்த முடிவிற்கு காரணம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@VivoIndiapic.twitter.com/pMTEPRaO82
— Vijay Television (@vijaytelevision) July 12, 2018
