பிக் பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் பிரமோவில் சக போட்டியாளர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் விருது அளிக்க வேண்டும். அது தான் இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட். பொதுவாக சாதனை விருது என்றால் ஓடி வருபவர்கள்,. பிக் பாஸ் விருது என்றால் தெறித்து ஓடிவிடுவார்கள். அந்த அளவிற்கு தறுமாறாக இருப்பது தான் பிக் பாஸ் விருதுகள். இப்படி எல்லாம் கூட விருதுகள் இருக்கா என யோசிக்கும் அளவு இருக்கும் பிக் பாஸ் விருதுகள்.

ஏற்கனவே பல அசத்தல் விருதுகளை போட்டியாளர்களுக்கு அளித்திருக்கும் பிக் பாஸ் இம்முறை மிருகங்களில் பெயரில் விருதுகளை வழங்கி இருக்கிறார். இதில் மும்தாஜ்க்கு நாகப்பாம்பு விருது ஐஸ்வர்யாவால் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல ஐஸ்வர்யாவிற்கு கழுதை விருதை  மும்தாஜ் வழங்கி இருக்கிறார்.

பிக் பாஸின் சீசன் 2ல் ஆரம்பம் முதல் சேஃப் கேம் விளையாடி வரும் ஜனனி தனக்கான விருதை தானே பரிந்துரைத்திருக்கிறார். இதனால் கடுப்பான  சக போட்டியாளர்கள்  அப்போ நாங்க என்ன இளிச்ச வாயா என கோபப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு முதலை எனும் விருதை வழங்கி இருக்கிறார் யாஷிகா. முதலைக்கண்ணீர் விடுகிறார் ஜனனி எனும் நோக்கில் தான் அவர் இந்த விருதினை வழங்கி இருக்கிறார்.

ஜனனியோ நான் இந்த விருதை பெற மாட்டேன் என கூறி இருக்கிறார். இதற்கு முன்னர் ஓவியாவிற்கு சோம்பேறி எனும் விருது கொடுக்கப்பட்ட போது அவரும் இதே போல தான் நடந்து கொண்டார். இதனால் பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஓவியா ஜனனிதானா எனும் கேள்வி ஜனனி ரசிகர்கள் எழுந்திருக்கிறது. பிக் பாஸின் சீசன் 2ல் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஜனனி தான் முதல் இடத்தில் இருக்கிறார், ஆனாலும் அவராலு ஓவியா அளவிற்கு வர முடியாது என்பதே ஓவியா ஆர்மியின் கருத்து.